ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஆண்டிபட்டியில் அனுதியின்றி கிரானைட் கற்கள் எடுத்துச் சென்ற லாரி பறிமுதல்

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற லாரியை கனிமவளத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :21 மே 2018, 7:00 pm

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற லாரியை கனிமவளத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி பகுதியில் இருந்து லாரியில் கிரானைட் கற்கள் கடத்திச் செல்வதாக கனிமவளத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் சாம்பசிவம் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் பல லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து லாரியை பறிமுதல்
செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் யார், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் எங்கு எடுத்து செல்லப்படுவது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.