தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியது: மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து உரமிடுவதற்காக விவசாயத் துறை மூலம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை அரசு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகளை சேகரித்து, மண் ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டிற்குள் மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 646 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண் வள அட்டையில் குறிப்பிட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் நிலத்தில் பயிர்களுக்குத் தேவையான உரமிடுவதால், உரச் செலவு குறைவதோடு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. சமச்சீர் உரமிடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும். எனவே, மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை கடையில் விற்பனை முனை கருவி(பி.ஓ.எஸ்.) மூலம் உரம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளும் மண் வள அட்டை வைத்திருப்பது அவசியமாகிறது.
தமிழகத்தில் மண் வள அட்டை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டும் மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் க.புதுப்பட்டி, உத்தமபாளையம்(வடக்கு), சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்கள் மண் வள அட்டை முன் மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!
நாளை ‘நீட்’ தோ்வு: மாணவா்களுக்கு மனநல ஆலோசனை! தமிழக அரசு ஏற்பாடு!!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

