விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோர் தமிழ்ச்

Updated On :21 மே 2018, 7:01 pm

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோர் தமிழ்ச் செம்மல் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் வளர்ச்சிக்காக தனியாகவோ, ஏதேனும் அமைப்பு மூலமோ அரும்பணியாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தமிழ்ச் செம்மல் விருது பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு, மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.