தேனியில் மின் வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு மின் வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை, முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற மின் வாரியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :

தேனியில் தமிழ்நாடு மின் வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை, முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற மின் வாரியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வட்டாரக் கிளைத் தலைவர் பி.இருளப்பன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.மூக்கையா, துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மின் வாரியம் சார்பில் கடந்த 2018, பிப்.22-ஆம் தேதி கையெழுத்தான ஊதிய உயர்வு மற்றும் வேலை பளுவை குறைப்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியா க ரூ.380 வழங்க வேண்டும். மின் வாரிய ஓய்வூதியர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.