ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

போடியில்  பைக் மோதி பெண்  கூலித் தொழிலாளி சாவு

போடியில் புதன் கிழமை, இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

Published On :

போடியில் புதன் கிழமை, இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு (70). இவரது மனைவி பார்வதி (62). இவர்கள் இருவரும் போடி சன்னாசிபுரம் பகுதியில் முருகதாஸ் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தோட்டத்தில் இருந்து நடந்து போடி- தேனி நெடுஞ்சாலைக்கு வந்தனர். அப்போது சாலையோரம் நடந்து வந்தபோது தேனியிலிருந்து போடி நோக்கி வந்த இருசக்கர வாகனம் பார்வதி மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி உயிரிழந்தார்.
இதுகுறித்து அய்யாவு அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கோவை, கிணத்துகடவு சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த சர்புதீன் மகன் இர்பான் ((22) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.