தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஏழைகாத்தம்மன் - வல்லடிக்காரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 596 காளைகள் , 390 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பட்டி கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். காலை 8 மணிக்கு , முதல் காளையாக ஊர் கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.
பின்னர், தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 596 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு 390 மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
48 மாடு பிடி வீரர்கள் காயம்: இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் காளைகளும் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டியதில் பலத்த காயமடைந்த 4 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 44 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.
அனைவருக்கும் பரிசு: போட்டியில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் குக்கர் மற்றும் தலைக்கவசம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ , கட்டில் , இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி என பல பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணி வரையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நேரம் இல்லாத காரணத்தால் ஜல்லிக்கட்டில் பங்கேற்காத காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை ஏராளமானோர் பார்வையிட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிற்பகலுக்கு பிறகு பார்வையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் வாடிவாசல் முன்பு மட்டும் கூட்டம் இருந்தது. மற்ற பகுதிகள் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) - தனுசு

வார பலன்கள் (மே 8 - 14) - விருச்சிகம்

CPI, CPIM கட்சிகள் ஆதரவு! TVK தொண்டர்கள் கொண்டாட்டம்!

வார பலன்கள் (மே 8 - 14) - துலாம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
