சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மகளிருக்கு இருசக்கர வாகனத் திட்டம்: ஜன.31 வரை விண்ணப்பிக்க அவகாசம்

தேனி மாவட்டத்தில் "அம்மா' இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்

Updated On :23 ஜனவரி 2019, 7:38 am IST

தேனி மாவட்டத்தில் "அம்மா' இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  "அம்மா' இருசக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் வாங்க விரும்பும் பெண்கள் மானியம் பெறுவதற்கு கடந்த 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், இருசக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து வரும் 31-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.