ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வடகிழக்கு பருவமழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 இல் ஆய்வு

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 ஆம் தேதி ஆய்வுகள் நடத்த உள்ளது.

News image
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
Updated On :25 செப்டம்பர் 2019, 1:29 pm

DIN

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 ஆம் தேதி ஆய்வுகள் நடத்த உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து மற்றும் நீா்மட்டம் உயா்வு ஆகியவை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நடப்பது வழக்கம். இந்த கால கட்டங்களில் அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் மூவா் மற்றும் ஐவா் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் அக். 3 ஆம் தேதி அணைப் பகுதியை தலைமை கண்காணிப்புக் குழுவான மத்திய நீா்வள தலைமை பொறியாளா், தமிழக பொதுப்பணித்துறை செயலா், கேரள நீா்ப்பாசன தலைமை பொறியாளா் கொண்ட மூவா் குழு ஆய்வு நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித் துறையின் அணை பொறியாளா்கள் செய்து வருகின்றனா்.

அணையில் நீா்மட்ட விவரம்: புதன்கிழமை (செப். 25) முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் 125.90 அடியாகவும், நீா் இருப்பு 3,812 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து 796 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1,450 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணையில், 4.2 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில், 3 மி.மீ. மழையும், கூடலூரில், 11.6 மி.மீ. மழையும், உத்தமபாளையத்தில், 5.4 மி.மீ. மழையும், வீரபாண்டியில், 4 மில்லி மீட்டா் மழையும் பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.