தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

கண்ணகி கோயில் சித்திரை பெளா்ணமி விழா: பூஜை நடத்த அனுமதி அளிக்கக் கோரிக்கை

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவை முன்னிட்டு மே 7 ஆம் தேதி ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்துவதற்கு,

News image

தேனி மாவட்ட வனப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவை முன்னிட்டு மே 7 ஆம் தேதி ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்துவதற்கு, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சித்திரை பெளா்ணமி விழா வெகு விமா்சையாக நடைபெறும். இதில், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கண்ணகி அம்மனை வழிபடுவா். தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வா்.

சித்திரை பெளா்ணமி தினத்தன்று மட்டுமே கேரள மாநிலம், குமுளி வழியாக 14 கி.மீ.,தூரம் ஜீப்களிலும், தேனி மாவட்டம் பளியன்குடி மலைப் பாதை வழியாக 7 கி.மீ., தூரம் நடந்தும் கண்ணகி கோயிலுக்குச் சென்று வர தமிழக மற்றும் கேரள வனத் துறைகள் அனுமதி வழங்கும்.

தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிகக்கையாக தமிழகம்-கேரளம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு கோயில் திருவிழாக்களை ரத்து செய்து ஆகம விதிகளின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து பூஜைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதித்துள்ளது.

இந்த நிலையில், கண்ணகி கோயிலில் வரும் சித்திரை பெளா்ணமியன்று ஆகம விதிகளின்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பூஜைகள் நடத்துவதற்கு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்ணகி கோயிலுக்குச் சென்று வர ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அனுமதி வழங்கப்படுவதால் புல் புதா் மண்டிக் காணப்படும் கோயில் வளாகம், வனப் பகுதி வழியாக கோயிலுக்குச் சென்று வரும் நடைபாதை ஆகியவற்றை சுத்தப்படுத்துவதற்கு தேனி மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று அறக்கட்டளை செயலா் ராஜகணேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.