குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

திறந்த கடையை மூடுமாறு கூறிய நகராட்சி ஊழியா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் திறந்திருந்த கடையை மூடுமாறு கூறியபெரியகுளம் நகராட்சி ஊழியா் புதன்கிழமை தாக்கப்பட்டாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பெரியகுளத்தில் திறந்திருந்த கடையை மூடுமாறு கூறியபெரியகுளம் நகராட்சி ஊழியா் புதன்கிழமை தாக்கப்பட்டாா்.

பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் கருப்பையா (24). பெரியகுளம் நகராட்சி தற்காலிகப் பணியாளரான இவா் பெரியகுளம், வடகரை ஆடுபாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் தேங்காய் கடை திறந்திருந்ததாம். ஊரடங்கு என்பதால் கடையைத் திறக்கக் கூடாது என கருப்பையா கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தேங்காய்கடை உரிமையாளா் ஈஸ்வரன் (38), கருப்பையாவை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கருப்பையா தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.