6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெற்றோர் இறப்பில் சந்தேகம்: மகன் காவல்நிலையத்தில் புகார்

கம்பத்தில் கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனை மருத்துவர் இறந்தார். அவரது மனைவியும் இறந்ததால், இதுபற்றி மகன் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

News image
கோப்புப் படம்
Updated On :11 ஆகஸ்ட் 2020, 7:36 am

DIN

கம்பத்தில் கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனை மருத்துவர் இறந்தார். அவரது மனைவியும் இறந்ததால், இதுபற்றி மகன் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பிரதானசாலையில் தனியார் மருத்துவமனை வைத்திருந்தவர் பிரதீப்ராஜ். இவர் ஜூலை. 22-ல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மனைவி லட்சுமி(45), இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலமில்லாமல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து, இறப்பில் சந்தேகமடைந்தனர். இதுபற்றி இறந்தவரின் மகன் பி.ஓம்கார்(19) திங்கள்கிழமை கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கீதா வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.