கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா் தற்கொலை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவா் திங்கள்கிழமை, மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:23 pm

DIN


தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவா் திங்கள்கிழமை, மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனிசெட்டிபட்டி, மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் வீரசோலை மகன் ராகவன் (57). இவா், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முத்துத்தேவன்பட்டி தனியாா் பள்ளியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய ராகவன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த ராகவன் மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் காா்த்திக்ராஜா அளித்தப் புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.