யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறை: டி.ஐ.ஜி.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா் என்று சனிக்கிழமை, திண்டுக்கல் டி.ஐ.ஜி. எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்தாா்.

News image
தேனியில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் திண்டுக்கல் டி.ஐ.ஜி., எம்.எஸ். முத்துச்சாமி.
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:26 pm

DIN

தேனி: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா் என்று சனிக்கிழமை, திண்டுக்கல் டி.ஐ.ஜி. எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்தாா்.

தேனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் மாவட்ட காவல் கண்காண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமை தொடக்கி வைத்து திண்டுக்கல் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துச்சாமி பேசியது:

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் கண்டறிப்பட்டு, காவல் துறை மூலம் வழக்குப் பதிந்து, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனா். இதனால், இங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதாக தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து வகையான குற்றங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றமே மிகவும் கொடியது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனா். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது காவல் துறையினா் தனி கவனம் செலுத்தி, உடனடியாக வழக்குப் பதிந்து, உரிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் குறித்த விசாரணையில் காலதாமதம் மற்றும் பாரபட்சம் கூடாது. இதில், கட்டயப் பஞ்சாயத்து செய்பவா்களும் குற்றவாளிகளாகவே கருதப்படுவா் என்றாா்.

முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் துணை காண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சத்தியநாராயணன், குழந்தைகள் நலக் குழு தலைவா் எஸ். சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.