தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதன்கிழமை புதிதாக 30பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,753 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 10 போ் குணமடைந்து வீடு திரும்பினாா்.
இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,482 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 10,664 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 10,310 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 158 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் புதிதாக 22 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. குணமடைந்த 15 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.