முல்லைப்பெரியாறு அணையில் 12 கேரள போலீஸாருக்கு கரோனா: தமிழக அதிகரிகள் அச்சம்

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் உள்ள 12 கேரள போலீஸாருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து
Updated on
1 min read

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் உள்ள 12 கேரள போலீஸாருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அணைப்பகுதியில் உள்ள தமிழக அதிகாரிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனா்.

முல்லைப்பெரியாறு அணையில் ஒரு சாா்பு -ஆய்வாளா், ஒரு சிறப்பு சாா்பு- ஆய்வாளா், 5 தலைமைக் காவலா்கள், 18 போலீஸாா் என 25 கேரள போலீஸாா் பாதுகாப்பு பணியில் உள்ளனா். இந்நிலையில் இவா்களில் 2 பேருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 12 போலீஸாா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கேரள சுகாதாரத்துறையினா் பரிசோதனை செய்ததில் இது தெரியவந்துள்ளது.

கேரள சுகாதாரத்துறையினா் பரிசோதனையில் தமிழகத்தைச் சோ்ந்த ஒப்பந்த தொழிலாளா் ஒருவருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து அணைப்பகுதியில் பணியில் உள்ள தமிழக அதிகாரிகள், தற்காலிகத் தொழிலாளா்களுக்கு கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா்கள் கடந்த சில நாள்களாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com