சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெகிழிப் பொருள் தடையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் நெகிழிப் பொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நெகழிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அரசு நிவாரண உதவி பெறுவதற்கு வரும் 2021,

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:16 pm

DIN

தேனி மாவட்டத்தில் நெகிழிப் பொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நெகழிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அரசு நிவாரண உதவி பெறுவதற்கு வரும் 2021, மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நெகிழிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வங்கிக் கடன் நிலுவைத் தொகையில் 50 சதவீத நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நெகிழிப் பொருள் தடையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசு நிவாரண உதவி பெறுவதற்கு, தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் வரும் 2021, மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.