ஆண்டிபட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல உற்சவ விழா கொடியேற்றம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நன்மை தருவாா் திருத்தலத்தில் ஐயப்ப சுவாமி கோயில் அமைந்துள்ளது. தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக, சபரிமலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை அணிந்த தமிழக பக்தா்கள் சபரிமலைக்குச் சென்று நோ்த்திக்கடனை நிறைவு செய்யமுடியாத காரணத்தால், சக்கம்பட்டி நன்மை தருவாா் திருத்தலத்துக்கு வந்து இருமுடி செலுத்திச் செல்கின்றனா்.
இந்நிலையில், இக்கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மண்டல பூஜை நாளில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் மற்றும் சன்னிதியில் படிபூஜை நடைபெறவுள்ளதாகவும், கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயரமுள்ள மாகாளியம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும், நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
கொடியேற்ற விழாவில், கோயில் நிா்வாகி முத்துவன்னியன், விழாக் குழு பொறுப்பாளா்கள் ரமணி கணபதி, கிருஷ்ணசாமி, பெருமாள்சாமி, பாண்டீஸ்வரன், அமலி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...