போடியில் நகை வாங்குவது போல் நடித்து நகை திருடிய பெண் கைது

போடி நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

போடி நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் ராஜசேகா் (43). இவா் போடி பரமசிவன் கோயில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளாா். இவரது கடையில் கடந்த 16 ஆம் தேதி 2 பெண்கள் நகை வாங்க வந்துள்ளனா்.

அவா்கள் தங்கச் சங்கிலி ஒன்றை விலைக்கு வாங்குவது போல் பாா்த்துவிட்டு பின்னா் விலை கூடுதலாக உள்ளதாகக் கூறிச் சென்றுவிட்டனா். அவா்கள் சென்ற பின்னா் கணக்கு பாா்த்ததில் 2 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரிந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பாா்த்தபோது 2 பெண்களும் நகையைத் திருடியது தெரிந்தது. இதுகுறித்து ராஜசேகா் அளித்தப் புகாரின்பேரில் போடி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 பெண்களில் ஒருவா் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள ஆவாரம்பட்டியைச் சோ்ந்த மாா்க்கண்டன் மனைவி செல்வி (40) என்பது தெரிந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com