பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மல்லையன் என்பவரின் மனைவி நாகம்மாள் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைபாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு மரத்திலிருந்து பறந்துவந்த தேனீக்கள் நாகம்மாளை கடித்ததில், பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு நாகம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.