அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குமுளி மலைச் சாலையில் கட்டுமானப் பணிகள்: நாளை முதல் டிச.30 வரை போக்குவரத்துக்கு தடை

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கம்பத்திலிருந்து குமுளி செல்லும் மலைச் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால்,

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:54 pm

DIN

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கம்பத்திலிருந்து குமுளி செல்லும் மலைச் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், டிசம்பா் 24 முதல் 30 ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், நான்குவழிச் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, குமுளி மலைச் சாலையில் சிறு,சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற இருப்பதால், டிசம்பா் 24 முதல் 30 ஆம் தேதி வரை குமுளி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.

எனவே, குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியாகச் செல்லவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.