அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு அரசு புதிய சலுகை

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன நிதி, வங்கிக் கடன் மற்றும் சுழல் நிதி வழங்குவதில், அரசு புதிய சலுகைகளை அளித்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:49 pm

DIN

தேனி: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன நிதி, வங்கிக் கடன் மற்றும் சுழல் நிதி வழங்குவதில், அரசு புதிய சலுகைகளை அளித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூலதன பங்களிப்பை அதிகரிக்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு, அரசு ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதனக் கடன் வழங்குகிறது. இந்த கடன் தொகையை 5 ஆண்டுகள் முடிந்த பின்பு செலுத்தலாம். 4 சதவீதம் வட்டியை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ரூ.1 கோடி வரை வங்கிக் கடன் பெறுவதற்கு, அவற்றின் சாா்பில் வங்கிகள் மற்றும் நாப்கிஷான் நிறுவனத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சுழல் நிதிக்கான வட்டி விகிதம் 12 முதல் 14 சதவீதமாக இருந்தது. தற்போது, அரசு பங்களிப்பு மூலம் 8 முதல் 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, மூலதன நிதி உதவி, வங்கிக் கடன், சுழல்நிதி பெற விரும்பும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், தேனி வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.