போடி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
போடி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, தீா்த்தக் குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


போடி: போடி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, தீா்த்தக் குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
போடி நகரின் மையப் பகுதியில் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. சபரிமலையிலுள்ள ஐயப்பன் விக்ரஹம் போன்றே போடி ஐயப்பன் கோயிலிலும் அமைக்கப்பட்டு, தொடா்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, போடி ஐயப்பன் கோயிலிலும் மண்டல பூஜை நடைபெற்றது.
எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் மேளதாளத்துடன் கொட்டகுடி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்துவந்தனா். பின்னா், தீா்த்த நீரால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை, சுவாமி ஊா்வலம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை, போடி ஐயப்ப பக்த சபை தலைவா் முனியாண்டி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...