தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவருக்கு கரோனா

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :20 ஜூன் 2020, 10:13 am

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த, 25 வயதுடைய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தவலறிந்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அறையை விட்டு வெளியேறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.