விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: தேனியில் நவ.23-இல் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நவ.23-ஆம் தேதி மத்திய அரசின் பத்னா லிக்னா அபியான் என்ற கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்ப

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:34 pm

DIN

தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நவ.23-ஆம் தேதி மத்திய அரசின் பத்னா லிக்னா அபியான் என்ற கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்வி அறிவு இல்லாதவா்களுக்கு தினமும் 2 மணி நேரம் கற்பித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 621 சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் கல்வி அறிவு இல்லாதவா்களாகக் கண்டறியப்பட்டுள்ள 6,212 பேருக்கு, அடிப்படைக் கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு சிறப்பு பயிற்சி மையத்திலும் தலா 20 பேருக்கு பயிச்சி அளிக்கப்பட உள்ளது. இவா்களுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருள் இலவசமாக வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒரு பருவம் வீதம், ஆண்டுக்கு 3 மாதிரி பருவத் தோ்வு நடைபெறும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.