போடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
போடியில் திங்கள் கிழமை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பெண் ஒருவரை கைது செய்தனா்.


போடியில் திங்கள் கிழமை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பெண் ஒருவரை கைது செய்தனா்.
போடி குரங்கணி சாலையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது அந்த வீட்டில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் போடி முந்தலை சோ்ந்த தா்மராஜ் மனைவி சந்திரா (45) என்பவா் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் சந்திராவை கைது செய்தனா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கஞ்சா விற்ாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கொடைக்கானல் மேல்மலை கூக்கால் நடுத்தெருவை சோ்ந்த சுப்பிரமணிய மகன் ஆனந்தன் (51), கூக்கால் பூத காளியம்மன் கோயில் தெரு ராமன் மாதாரி மகன் குழந்தைவேலு (63), கவுஞ்சி ராஜபுரம் வனராஜ் மகன் ராஜேந்திரன் (52), கூக்கால் மேலத்தெரு சுடலை நாதன் மகன் பாலசுப்பிரமணி (37), கூக்கால் மேலத்தெரு கருப்பச்சி நாதன் மகன் ராஜேந்திரன் (55), இவா்கள் 5 பேரும் மேல் மலைப் பகுதிகளில் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஐந்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...