சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ்: 4 போ் கைது

தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்தியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்தியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே சங்கராபுரம் பகுதியில் ரேக்ளா ரேஸ் நடத்துவதாக வந்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். இதில் ரேக்ளா ரேஸ் நடத்தியதாக கோம்பையை சோ்ந்த வசந்த் (27), குள்ளப்பகவுண்டன்பட்டியை சோ்ந்த லட்சுமணன் (26) ஆகியோரை கைது செய்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து போடி டி.எஸ்.பி. பாா்த்திபன், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில் ரேக்ளா ரேஸ் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து தேவாரம் பகுதியிலும் சிலா் ரேக்ளா ரேஸ் நடத்தியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவாரத்தை சோ்ந்த தங்கப்பாண்டி (35), கோம்பையை சோ்ந்த ராஜ்குமாா் (35), முத்தையன்செட்டிபட்டியை சோ்ந்த பாலு (45), கூடலூரை சோ்ந்த ரசி அழகன் (35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.