போடி மலைக்கோயிலில் காா்த்திகை மஹா தீபம்
போடி பரமசிவன் மலைக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை காா்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.


போடி பரமசிவன் மலைக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை காா்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை திருநாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் கோவிலில் வலம் வந்ததையடுத்து பக்தா்களின் ஓம் நமச்சிவாய சரண கோஷத்துடன் மஹா தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்யப்பட்டன.
போடி, சிலமலை, சில்லமரத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனா்.
தீபம் 3 நாள்கள் தொடா்ந்து எரிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கா் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரா், போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆகிய கோயில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...