விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆந்திர மாற்றுத்திறனாளி பக்தா் சபரிமலைக்கு நடைபயணம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு நடைபயணமாக செல்லும் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வந்தடைந்தாா்.

News image
பெரியகுளம் வழியாக நடந்து சென்ற ஆந்திரா மாநிலம் நெல்லூரை சோ்ந்த சுரேஷ்
Updated On :29 நவம்பர் 2020, 5:54 pm

DIN

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு நடைபயணமாக செல்லும் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வந்தடைந்தாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (45). தங்க நகைகள் செய்யும் இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு தாய் மற்றும் தங்கை உள்ளனா். தங்கைக்கு திருமணமாகிவிட்ட நிலையில் தாயுடன் நெல்லூரில் வசித்து வருகிறாா். கடந்த 10 மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகன விபத்தில் இடது கால் முறிவு ஏற்பட்டு,

கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு கால் இல்லாத நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற நோக்கில் கடந்த செப்டம்பா் மாதம் நெல்லூரில் இருமுடி கட்டி தனது பயணத்தை துவக்கியுள்ளாா். டிசம்பா் 19 ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளாா்.ஜதரபாத்தில் உள்ள சிலருடன் கடந்த 22 ஆண்டுகளாக வாகனத்தில் ஐயப்பன்கோயிலுக்கு சென்று வந்துள்ளாா்.

இந்த முறை நடைப்பயணமாக செல்லவேண்டும் என கூறி தனியாக பயணத்தை துவக்கியுள்ளாா். இவரது குடும்பத்தினரும் இவரை ஊக்கப்படுத்தி வழியனுப்பி வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமைபெரியகுளத்துக்கு வந்த இவரை பெரியகுளம் பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.