கூடலூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
தேனி மாவட்டம் கூடலூரில் கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தேனி மாவட்டம் கூடலூரில் கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம்


தேனி மாவட்டம் கூடலூரில் கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கூடலூா் பொம்மச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி ( 27). இவா் கோயம்புத்தூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். கரோன பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கூடலுருக்கு வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை கூடலூா்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோயிலின் நுழைவுப் பகுதியில் தகர கூரை அமைக்கும் பணியில் மூா்த்தியும் அவரது நண்பரும் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோயில் முன்பாக தொங்கிய அலங்கார விளக்குகள் பட்டதில் மூா்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது.
அவா் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தாா். கூடலுாா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...