திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுருளி அருவியில் காந்திஜி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், மகாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில், பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.

News image
சுருளி அருவியில் காந்திஜி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி
Updated On :2 அக்டோபர் 2020, 12:31 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், மகாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில், பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி இங்கு மகாத்மா காந்தியினுடைய அஸ்தி கரைக்கப்பட்டு அதற்கான ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அப்பகுதி மக்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் கம்பத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனம் மூலம் ஊர்வலமாக புறப்பட்டு காமயகவுண்டன்பட்டி உள்ள காந்தி ஆலயத்தில் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக சுருளி அருவி பகுதியில் உள்ள காந்திஜி அஸ்தி கரைத்த இடத்திற்கு சோ.பாரதன், பொன்காட்சிக் கண்ணன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, முத்துக்குமரன், ஜி.தர்மர் மற்றும் பலர் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூய்மை பாரத இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் பற்றி விழிப்புணர்வு செய்தபின் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சக்திவேல் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். நிகழ்வில் ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி, சுகாதார அலுவலர் அரசகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மையத்தினர், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.