கம்பம் ஒன்றியப் பகுதிகளில் திமுகவினர் நடத்திய கிராமசபைக் கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் திமுகவினர் தடையை மீறி கிராமசபைக் கூட்டங்களை வெள்ளிக்கிழமை நடத்தினர்.


தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் திமுகவினர் தடையை மீறி கிராமசபைக் கூட்டங்களை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதாக அரசு அறிவித்து, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை கம்பம் ஒன்றிய திமுக செயலாளர் சூர்யா தங்கராஜா தலைமையில் திமுகவினர் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராமசபைக் கூட்டம் நடத்தினர்.
அதில் மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதேபோல் சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய ஊராட்சி அலுவலகம் அருகே தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
தடையை மீறி கிராமசபைக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொ.மு.ச.மாவட்ட தலைவர் செல்லப்பா, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சிவசாமி, செல்வகுமார், விவசாய அணி அமைப்பாளர் ராஜாங்கம், மாவட்ட பிரதிநிதி முத்துவீரப்பன் உள்ளிட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அ.மொக்கப்பன் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் தமயந்தி உள்ளிட்டோர் உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் காவல் ஆய்வாளர் முத்துமணி அலுவலகத்திற்குள் வந்து, கூட்டம் கூடக்கூடாது, கலைந்து செல்லுங்கள் என்றார். இதனால் தலைவர் அ.மொக்கப்பன் மற்றும் உறுப்பினர்கள் காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...