தேனியில் நகரும் நியாயவிலைக் கடைகள்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
தேனி அருகே நாகலாபுரத்தில் திங்கள்கிழமை அரசு சார்பில் நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


தேனி அருகே நாகலாபுரத்தில் திங்கள்கிழமை அரசு சார்பில் நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நாகலாபுரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அருகே மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரும் நியாய விலைக் கடை வாகனங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின் கீழ் தேனி வட்டாரத்தில் 11 கடைகள், பெரியகுளம் வட்டாரத்தில் 16, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 33, போடி வட்டாரத்தில் 7, உத்தமபாளையம் வட்டாரத்தில் 8 கடைகள் என மொத்தம் 75 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேனியில் நாளைய முதல்வரே என துணை முதல்வரை குறிப்பிட்டு அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்.
வரவேற்பு: முன்னதாக, தேனியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குச் சென்ற துணை முதல்வருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக மீனவரணி செயலர் வைகை கருப்பு ஏற்பாட்டில் 'நாளைய முதல்வரே'என குறிப்பிட்டு 100 அடி நீள பேனருடன் துணை முதல்வரை அக் கட்சியினர் வரவேற்றனர். இன்று பிற்பகல் துணை முதல்வர் சென்னை செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...