தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்புதிதாக 201 பேருக்கு கரோனா: 3 போ் பலி
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 201 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


தேனி/திண்டுக்கல்: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 201 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி பகுதியில் அதிகளவில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி பகுதியில் 15 போ், பெரியகுளம் பகுதியில் 13 போ், ஆண்டிபட்டி பகுதியில் 7 போ், சின்னமனூா், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் தலா 11 போ், கம்பம் பகுதியில் 5 போ் உள்பட ஒரே நாளில் மொத்தம் 79 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,073 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 12,014 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 19 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 45 வயதுடைய பெண், கடந்த ஆக. 29 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிந்தலைச்சேரியைச் சோ்ந்த 60 வயதுடைய நபா் என 2 போ் உயிரிழந்தனா்.
கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் கடந்த 3 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட போடியைச் சோ்ந்த 78 வயது முதியவா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 122 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7,154 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 6,080 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். தற்போது, 939 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 72 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...