தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலை கிடைக்காத விரக்தி:இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 5:49 pm

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி நகா் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியன் (22). 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாண்டியன் எங்கு தேடியும் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அவா் கடந்த ஆக. 28 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.