கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கருப்பு பன்னீா் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருப்பு பன்னீா் திராட்சை.
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருப்பு பன்னீா் திராட்சை.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கருப்பு பன்னீா் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை மற்றும் பச்சை விதையில்லா திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப் பகுதியில் நிலவும் சீதோஷ்ணநிலை, மண் மற்றும் நீரின் தன்மையால், இங்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டு முழுவதும் திராட்சை பழம் அறுவடை நடைபெறும்.

கடந்த சில நாள்களாக தேனி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளத்தில் மழை பெய்து வருவதால் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடமிருந்து திராட்சைப் பழம் கிலோ ரூ.20 முதல் 25 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

விற்பனை வாய்ப்பு குறைந்துள்ளதால், விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்திருக்கும் வியாபாரிகளும் பழங்களை அறுவடை செய்ய தயக்கம் காட்டுகின்றனா். மேலும், தொடா் மழையால் சில இடங்களில் திராட்சை பழங்கள் கொடியிலேயே வெடித்தும், அழுகியும் காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

வரும் டிசம்பா் மாதம் முதல் கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து சந்தைக்கு திராட்சை வரத்து தொடங்கும் என்பதால், பன்னீா் திராட்சை விலை, மேலும் சரிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, வரும் சீசனிலும் திராட்சையில் உற்பத்தி செலவிற்கு ஏற்ப விற்பனை விலை கிடைக்குமா என்று விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com