திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: நீர்வரத்து 3,777 கன அடியாக அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீ்ரவரத்து விநாடிக்கு 3,777 கன அடியாக வந்தது.

News image
முல்லைப்பெரியாறு அணை.
Updated On :21 செப்டம்பர் 2020, 5:46 am

DIN

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீ்ரவரத்து விநாடிக்கு 3,777 கன அடியாக வந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் 125.80 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 3,791 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,399 கன அடியாகவும், வெளியேற்றம் 1,400 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 38 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 37.2 மி.மீ., மழை பெய்தது.

திங்கள்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 126.75 அடியாகவும், அணைக்குள் விநாடிக்கு 3,777 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 2378 கன அடி அதிகரித்து வந்தது, மேலும் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது. பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 58.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 37.2 மி.மீ., மழையும் பெய்தது.

சண்முகாநதி அணை

பல மாதங்களுக்கு பிறகு ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.  அணையின் நீர்மட்டம் 26.40 அடியாகவும் (மொத்த உயரம் - 52.55) நீர் இருப்பு 17.14 மில்லியன் கன அடியாகவும், அணைக்குல் நீர் வரத்து விநாடிக்கு 3 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.