திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியகுளத்தில் வராக நதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம்

பெரியகுளம் வராகநதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2020, 7:33 am

DIN

பெரியகுளம் வராகநதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம் 
விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லும் வராகநதி பராமரிப்பு இல்லாததால் அசுத்தமடைந்து வந்தது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் முயற்சியால் வராகநதி தூய்மைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு, நகராட்சி உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். 

இதன்மூலம் வராக நதி மீண்டும் புத்துயிர் பெறும் என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.