கம்பத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.500 

கம்பத்தில் திங்கள்கிழமை மல்லிகை பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது.
கம்பத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.500 

கம்பத்தில் திங்கள்கிழமை மல்லிகை பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது.

தேனி மாவட்டத்தில் தேனி, சீலையம்பட்டி, கம்பம் ஆகிய இடங்களில் பூ மார்க்கெட் உள்ளது. தேனி, சீலையம்பட்டியில் காலையில் தொடங்கும் பூ சந்தை 10 மணிக்குள் முடிவடையும், மொத்த வியாபாரம் மட்டும்தான்.

ஆனால் கம்பத்தில் உள்ள பூ சந்தை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும், இங்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது.

மல்லி, அரளி, சம்பங்கி, துளசி, சென்டுபூ, செவ்வந்தி உள்ளிட்டவை கம்பம், கூடலூர், சின்னமனூர் வட்டார பகுதிகளில் இருந்து கம்பம் பழைய பேருந்து நிலைய சாலையில் உள்ள பூ சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இதுபற்றி பூ வியாபாரி க.சுருளிநாதன் கூறும்போது,  நாள்தோறும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு சுமார் 5 டன் பூக்கள் செல்லும்.  தற்போது கரோனா பொதுமுடக்கம் என்பதால் பூக்கள் கேரளத்துக்குள் செல்லாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் வியாபாரிகள் அதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பொதுமுடக்கத்தில்  தளர்வு ஏற்பட்டால் தான் வியாபாரம் இருக்கும் என்றார். கேரளத்தில் ஓணம் பண்டிகை ஆக. 21, கொண்டாடப்பட உள்ளது, அதற்கு பூக்கள் நிறைய தேவைப்படும், குறிப்பாக அரளி பூ பயன்பாடுகள் அதிகம்.

தேனி மாவட்டத்திலிருந்து பூக்கள் செல்வதற்கு இன்னும் ஏற்பாடுகள் நடைபெறவில்லை, அப்படி பூக்கள் சென்றால்தான் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திங்கள்கிழமை பூ மார்க்கெட்: சம்மங்கி - கிலோ ரூ. 80, சென்டு பூ கிலோ ரூபாய் 100, மீடியம் கிலோ ரூபாய் 60 முதல் 80 வரை. ஓசூரிலிருந்து வரும் மிரபிள் ரோஸ் சில்லறை விற்பனைக்கு கிலோ ரூபாய், 100 மொத்தம் விலை கிலோ 80க்கும் விற்பனையாகிறது. மல்லிகை பூ மட்டும் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com