திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூர் அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மொச்சக்காய் காட்டிற்கு மருந்து அடிக்கும்  சென்ற கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
தற்கொலை செய்துகொண்ட கணவன், மனைவி
Updated On :7 டிசம்பர் 2021, 6:31 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே மொச்சக்காய் காட்டிற்கு மருந்து அடிக்கும்  சென்ற கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர், 12 ஆவது வார்டு ஜக்கன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் வீருசிக்கு (48), இவரது மனைவி முத்துலட்சுமி(38). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு சுபாஷ் (18) மூவேஸ் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

திங்கட்கிழமை வீருசிக்கு, முத்துலட்சுமி ஆகிய இருவரும் டிவிஎஸ் மொபட் வாகனத்தில் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள மொச்சக்காய் காட்டிற்கு மருந்து அடிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.

மாலை நீண்ட  நேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வீடு திரும்பவில்லை, இதனால் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும்  தேடி பெருமாள் கோவில் மலை பகுதிக்கு சென்றனர். காணவில்லையாதலால்  இளைய மகன் மூவேஸ் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் கே.முத்துமணி, சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் பெருமாள் கோவில் மலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர்.

அப்போது கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்த நிலையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தனர்.

இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில்  ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.