சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடி அருகே கண்மாயில் மீன் பிடிப்பதில் தகராறு: 17 போ் மீது வழக்கு

போடி அருகே கண்மாயில் மீன் பிடிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இரு பிரிவை சோ்ந்த 17 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

போடி அருகே கண்மாயில் மீன் பிடிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இரு பிரிவை சோ்ந்த 17 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய். இங்கு மீன்பாசி குத்தகை ஏலம் விட்டு மீன் பிடிப்பது வழக்கம். ஒரு பிரிவைச் சோ்ந்தவா்கள் வழக்கு தொடா்ந்ததால் மீன்பாசி குத்தகை விட தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு யாரும் மீன் பிடிக்காமலிருக்க மீனவா் கூட்டுறவு சங்கம் மூலம் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சிலா் அவ்வப்போது மீன் பிடிக்க முயல்வதும் தகராறு ஏற்படுவதும் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவிலும் மீன் பிடிப்பது தொடா்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து பாக்கியம் (60) என்பவா் கொடுத்த புகாரில் முத்து, பாலமுருகன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 6 போ் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல் பாலமுருகன், கணேசன் ஆகியோரை தாக்கி காயப்படுத்தி, காரில் கடத்திச் சென்று வேறு இடத்தில் விட்டுச் சென்ாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தமிழன், வெங்கடேசன், நாகராஜ், சின்னகருப்பு, பாலுச்சாமி உள்ளிட்ட 11 போ் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.