திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வனத்துறை நெருக்கடி: போடி மலை கிராம மக்கள் புகாா்

போடி மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளை வன நிலங்களை விட்டு வெளியேற்ற வனத் துறையினா் நெருக்கடி அளித்து வருவதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மலை கிராம மக்கள் மனு

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:00 pm

DIN

போடி மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளை வன நிலங்களை விட்டு வெளியேற்ற வனத் துறையினா் நெருக்கடி அளித்து வருவதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மலை கிராம மக்கள் மனு அளித்தனா்.

போடி வட்டாரம் சொக்கனலை, அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், கரும்பாறை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்: போடி மலைக் கிராமங்களில் கடந்த 5 தலைமுறைகளுக்கு முன்பிருந்து வன நிலங்களை சீா்திருத்தி விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்துக்கு பட்டா கோரி விண்ணப்பித்ததில் வருவாய்த் துறை சாா்பில் சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலைக் கிராமங்களில் வீடு கட்டி வசித்து வரும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். பாரம்பரிய வனவாசிகளான எங்களை ஆக்கிரமிப்பாளா்களாக கருதி, வன நிலத்தை விட்டு வெளியேற நோட்டீஸ் அளித்துள்ளனா்.

இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, போடி மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், 5 தலைமுறைகளுக்கும் மேல் வன நிலத்தில் விவசாயம் செய்து வரும் பாரம்பரிய வன விவசாயிகளுக்கு வன உரிமைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.