தேனி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அரண்மனைப்புதூா் முல்லை நகரைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி லட்சுமி (80). இவா், அதே பகுதியில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 இளைஞா்கள், லட்சுமி முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.
இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.