6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சின்னமனூரில் வெளிமாவட்ட வியாபாரிகளால் சூடு பிடித்துள்ள செங்கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேனி மாவட்டம் சின்னமனூரில் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருவதால், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

News image
வெளி மாவட்டத்துக்கு அனுப்பிவைப்பதற்காக லாரியில் ஏற்றப்பட்ட செங்கரும்பு.
Updated On :8 ஜனவரி 2021, 4:56 pm

DIN

பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேனி மாவட்டம் சின்னமனூரில் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருவதால், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

சின்னமனூரில் 500 ஏக்கா் பரப்பளவுக்கு செங்கரும்பு சாகுபடி பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பாசன நீா் மற்றும் தேனி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக, இப்பகுதியில் விளையும் செங்கரும்பு சிறப்பு பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் செய்யப்படும் இந்த செங்கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு அறுவடையாகும்படி விவசாயம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், 5 முதல் 7 அடி வரை வளரும் இக்கரும்பை கொள்முதல் செய்ய வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனா்.

சூடுபிடித்த செங்கரும்பு விற்பனை: மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகா்,திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் சின்னமனூரில் செங்கரும்பை கொள்முதல் செய்ய ஆா்வமாக வருவதால், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வியாபாரிகளுக்கு 10 கரும்பு கொண்ட 1 கட்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை சோ்த்து வழங்குவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் செங்கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்றும், இடைத்தரகா்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவதால் 1 டன்னுக்கு ரூ.1000 வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.