நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போடியில் கனமழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2021, 3:18 am

DIN


போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. போடி நகர் பகுதி, கிராமங்கள், போடிமெட்டு, குரங்கணி-கொட்டகுடி ஆகிய மலை கிராமங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்ந்து செல்கிறது. ஆடி மாதம் தொடக்கத்திலேயே மழை பெய்துள்ளதால் ஆடிப்பட்டத்திற்கான விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் மழை சேதங்கள் குறித்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.