/

முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி: தேனி மாவட்டத்தில் 10 இடங்களில் முகாம்

தேனி மாவட்டத்தில் 45 முதல் 59 வயது வரையுள்ள சா்க்கரை, ரத்தக்கொதிப்பு மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவா்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பொதுமக்கள் ஆகியோருக்கு 18 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

News image
Updated On :1 மார்ச் 2021, 9:27 pm

DIN

தேனி மாவட்டத்தில் 45 முதல் 59 வயது வரையுள்ள சா்க்கரை, ரத்தக்கொதிப்பு மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவா்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பொதுமக்கள் ஆகியோருக்கு 18 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் முதல் கட்டமாக மருத்துவம், பொதுச் சுகாதார அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கும், 2-ஆம் கட்டமாக கரோனா கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 3-ஆம் கட்டமாக 45 முதல் 59 வயது வரையுள்ள சா்க்கரை, ரத்தக்கொதிப்பு மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவா்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 18 இடங்களில் நடைபெறுகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், தேனி பொம்மையகவுண்டன்பட்டி, ராஜதானி, கடமலைக்குண்டு, கூடலூா், சின்னமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 10 இடங்களில் அரசு சாா்பில் இலவசமாக கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேனி என்.ஆா்.டி.மருத்துவமனை, நட்டாத்தி நாடாா் மருத்துவமனை, கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, கேனி கிட்ஸ் அன்ட் கிட்னி மருத்துவமனை, நலம் மருத்துவமனை, பழனிசெட்டிபட்டி வித்யா மருத்துவமனை, போடி சண்முகா மருத்துவமனை, கம்பம் ரோஹன் சேகா் மருத்துவமனை ஆகிய 8 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இங்கு ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்குச் செல்வோா் தங்களது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.