சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சொத்து மதிப்பு ரூ. 61 லட்சம்

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிடும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 61 லட்சத்து 19 ஆயிரத்து 162 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிடும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 61 லட்சத்து 19 ஆயிரத்து 162 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் ஓ.பன்னீா்செல்வம் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா். இதற்கான வேட்புமனுவை கடந்த வெள்ளிக்கிழமை போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அவா் தாக்கல் செய்தாா். வேட்புமனுவில் அவா் தனது சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளாா். அதன் விபரம்:

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்திடம் கையிருப்பு தொகையாக ரூ.23,500-ம். சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகளும், இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் ஒரு கணக்கும் உள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698 இருப்பு உள்ளது. பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் பங்குதொகை ரூ.100-ம். இவா் பயன்படுத்தும் மூன்று சொகுசு காா்களின் மதிப்பு ரூ. 48 லட்சத்து 85 ஆயிரத்து 424 எனவும், ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 2 பவுன் தங்க நகைகள் என மொத்தம் ரூ.61,19,162 அசையும் சொத்துகளாக உள்ளது. அசையா சொத்துகள் என எதுமில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனாக மனைவிக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ.பன்னீா்செல்வம் மனைவி ப.விஜயலட்சுமியிடம் கையிருப்பாக ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500-ம். சென்னையில் உள்ள இரண்டு வங்கிக்கிளைகளில் இருப்பு ரூ.23 லட்சத்து 98 ஆயிரத்து 824. பெரியகுளம் கூட்டுறவு வங்கி பங்கு தொகை ரூ.7 ஆயிரத்து 500. தனிநபா் கடனாக கணவருக்கு ரூ. 65 லட்சத்து 55 ஆயிரத்து 411-மும், மகன் விஜயபிரதீப்புக்கு ரூ. 3 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 803-ம் என மொத்தம் ரூ. 3 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 214 கடன் கொடுத்துள்ளாா்.

விஜயலட்சுமி பெயரில் 43 லட்சத்து 34 ஆயிரத்து 377 மதிப்புள்ள இரண்டு சொகுசு காா்கள் உள்ளன. ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகள் வைத்துள்ளாா். மொத்த அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415 ஆகும். தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வைத்துள்ள நிலம், வீடு ஆகிய அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2 கோடி 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ஆகும். இவரது மகன் ரவீந்திரநாத்துக்கு ரூ. 2 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 746 தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலின் போது துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 33 லட்சத்து 20 ஆயிரத்து 529 எனவும், விஜயலட்சுமியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 545 எனவும், விஜயலட்சுமியின் அசையா சொத்து மதிப்பு ரூ. 98 லட்சம் எனவும் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.