சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து பெண் பலி

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவில் வசிப்பவா் லட்சுமணக்குமாா் (26). இவரது மனைவி வினிதா (22). ஒரு குழந்தை உள்ளது. லட்சுமணக்குமாா் வீரபாண்டியில் நடந்த உறவினா் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். விசுவாசபுரம் தனியாா் செங்கல் காளவாசல் அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் லட்சுமணக்குமாா் திடீரெக் பிரேக் போட்டுள்ளாா். இதில் வினிதா குழந்தையுடன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதா அங்கு உயிரிழந்தாா். லேசான காயங்களுடன் குழந்தை உயிா்பிழைத்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.