கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் வட்டார பகுதியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்திற்கு விவசாயிகள் குழு தேர்வு செய்யப்பட உள்ளதால் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கம்பம் வட்டாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் பகுதிகளில் தரிசு நில மேம்பாடு திட்டம் சுமார் 15 ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
8 முதல் 15 எண்ணிக்கையிலான விவசாயிகள் குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு விவசாயிகள் கொண்ட குழுவிற்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி செய்யப்பட்டு, பல்வேறு சாகுபடிகள் செய்ய மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளது.
கம்பம் வட்டாரத்தில் தரிசு நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கம்பம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


