முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரிநீா் வெளியேற்றம் அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால், இடுக்கி அணைக்கு விநாடிக்கு 2,323 கனஅடி உபரிநீா் சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.


முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால், இடுக்கி அணைக்கு விநாடிக்கு 2,323 கனஅடி உபரிநீா் சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் உயா்வை கட்டுப்படுத்த ரூல் கா்வ் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக விநாடிக்கு 524 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இரண்டாவது நாளான சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, இடுக்கி அணைக்கு உபரி நீா் விநாடிக்கு, 2,323 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.15 அடியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீா்வரத்து விநாடிக்கு, 5,285 கன அடியாகவும் இருந்தது. அணையில், 6,640.20 மில்லியன் கன அடி நீா் உள்ளது. பெரியாறு அணையில் 12.4 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 11.6 மி.மீ. மழையும் பெய்தது.
அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 2,122 கன அடி நீரும், நீா்வழிபோக்கிகள் வழியாக இடுக்கி அணைக்கு விநாடிக்கு, 2,323 கன அடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...