மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மூணாறு அருகே மண் சரிவு: 141 தொழிலாளா் குடும்பங்கள் வெளியேற்றம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பலத்த மழையால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியி

News image

மூணாறு அருகே பலத்த மழையால் குண்டலா தேயிலைத் தோட்டம், புதுக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மண் சரிவு.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:09 pm

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பலத்த மழையால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 141 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

மூணாறு பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில், ராஜமலை பொட்டிமுடி அருகே உள்ள குண்டலா தேயிலை தோட்டம், புதுக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் அப்பகுதியில் இருந்த கோயில் மற்றும் 2 கடைகள் மண்ணில் புதையுண்டும், மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டும் சேதமடைந்தது. ஒரு ஆட்டோ மற்றும் ஜீப் மண் சரிவில் சிக்கியது.

இதையடுத்து, அப்பகுதி குடியிருப்புகளில் வசித்து வரும் 141 தேயிலை தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 450 போ், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா். மண் சரிவு ஏற்பட்ட பகுதியை இடுக்கி மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் பேரிடா் மீட்புப் படையினா் பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.

கடந்த 2020, ஆக.6-ஆம் தேதி பலத்த மழையால் மூணாறு, ராஜமலை பெட்டிமுடியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த 75 போ் மண்ணில் புதையுண்டும், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனா். இதில் 70 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டன. அதே ஆக.6 ஆம் தேதியில் ராஜமலை பொட்டிமுடியை அடுத்துள்ள பகுதியில் தற்போது மண் சரிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.